december3.org

27/11/2024

Event Highlights

மரியாதையுடன் நினைவுகூருகிறோம்:

மிகுந்த வருத்தத்துடன், தமது அன்பும் அர்ப்பணிப்பும் மூலம் எங்களை நெகிழ வைத்த திரு நாகப்பன் அவர்களின் மறைவை அறிவிக்கின்றோம். கடந்த மூன்று ஆண்டுகளாக, டிசம்பர் 3 இயக்கத்தில் பராமரிப்பாளராக பணியாற்றிய அவர், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் செயல்பாடுகளில் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தார்.

தோழர்களே மரியாதைக்குரிய திரு நாகப்பன் அவர்கள் திண்டுக்கள் மாவட்டத்தின் மிக முக்கியமான தன்னார்வலர். திண்டுக்கள் மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அந்நிகழ்ச்சிக்கு வரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வயிரார உணவு வழங்க கூடிய மனிதர் அவர் கடந்த நிகழ்ச்சிக்கு கூட வழங்கினா.

மாற்றுத்திறனாளிகள் சமுகத்தில் எதிர்கொண்ட சவால்களுக்கு அவர் எடுத்த கண்ணியமான முன்னேற்ற முயற்சிகள் மறக்கமுடியாதவை. அவரின் புத்திசாலித்தனமான தீர்வுகளும் முழு உறுதிசாலியான ஆதரவும், அவர்கள் உரிமைகளை நிலைநாட்டப் பயன்பட்டன.

விளையாட்டுகள் பற்றிய பேரார்வம் கொண்ட திரு நகப்பன், கபடி, கிரிக்கெட் போன்ற போட்டிகளை ஏற்பாடு செய்து, சமூகத்துக்கு உற்சாகமும் இணக்கமும் அளித்தார்.

மாற்றுத்திறனாளிகள் மீதான உறுதியான அர்ப்பணிப்புக்கு அப்பாலும், திரு நகப்பன் பன்முகத் தான செயல்களில் ஈடுபட்டார். கோவில்களின் கட்டுமானத் திட்டங்களை ஆதரித்ததும், ஆன்மிகத் தானங்கள் செய்ததும் குறிப்பிடத்தக்கவை. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வளங்களை மேம்படுத்தவும், கல்வி உபகரணங்களை வழங்கவும் அவர் முனைந்தார்.

இவற்றுடன், மாடர்ன் இன்ஸ்டிட்யூட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்புகள் மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. மாற்றுத்திறனாளிகள் கல்வி பயணத்தை மேற்கொள்ளும் வகையில், அவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி, எதிர்காலத்துக்கான வழிகளை திறந்தார்.

அவரின் உயரிய பணிகளைத் தொடர்ந்து ஒரு இணக்கமான மற்றும் கருணை மிக்க உலகை உருவாக்க முயல்வோமாக.

மோகன்ராஜ்,
மாநிலத் துணைத் தலைவர்,
டிசம்பர் 3 இயக்கம்.
Tag Post :
Share This :