டிசம்பர் 3 இயக்கம் சார்பில், 25.11.2024 ( திங்கட்கிழமை), செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக அனைத்து நேர்காணல் முடிந்து காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் கடந்த பிறகு இதுவரை வீடு ஒதுக்கீடு ஆணை வழங்காதது குறித்தும், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இலவச இரண்டு செண்ட் மனை வழங்கவில்லை. காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர், தாம்பரம், அச்சரப்பாக்கம், மதுராந்தகம். போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
டிசம்பர் 3 இயக்கம், சமுதாயத்தை மாற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட கடிதம் வாயிலாக தகவல் தெரிவித்து கோரிக்கைகளை முன்வைத்தோம். உரிய அதிகாரிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனைத்தையும் விரைவில் சரி செய்ய வேண்டும் எனவும் இதற்கான தகவல்களை எனக்கு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.
உடன் மாவட்ட பொதுச்செயலாளர் தோழர். முரளி, மாவட்ட பொருளாளர் தோழர். பேபி மேரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர். நாகராஜ், தாம்பரம் ஒன்றியம் செயலாளர் தோழர். தேவிகலா மற்றும் சங்க தோழர்கள் 30 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு குறைகளை எழுத்து மூலமாக தெரிவித்தோம்.